நடிப்பிற்கு முன்பு பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா என்ன வேலை செய்தார் தெரியுமா..? பலரும் அறிந்திடாத ர கசியம்

0

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகம் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்தில் நடிக்கும் நடிகை ஹேமா நடிப்பதற்கு முன்பு என்ன வேலை செய்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.மயிலாடுதுறையில் பிறந்த ஹேமா,அங்குள்ள செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்ததோடு,அங்குள்ள ஏவிசி கல்லூரியில் இளங்கலைப் பட்டம் படித்து முடித்துள்ளார்.பின்பு உள்ளூர் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக களமிறங்கிய இவர்,வசந்த் ரிவி மற்றும் பல ரிவியில் செய்தி தொகுப்பில் வேலை பார்த்துள்ளார்.பின்பு ஆபிஸ் சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த இவர், பல ரிவி சீரியல்களில் நடித்ததோடு,சில படங்களிலும் நடித்தார்.

ஆம் இந்த சீரியலின் மூலம் தான் புகழின் உச்சத்தில் தற்போது இருக்கின்றார்.அண்ணன் தம்பிகள் இருக்கும் கூட்டுக்குடும்பத்தில் திருமணம் செய்த இவர்,பணக்கார வீட்டு பெண்ணாவார்.ஆரம்பத்தில் மீனாவை நெ கட்டிவாக காட்டினர்.ஆனால் போகபோக மீனாவின் கதாபாத்திரத்துக்காகவே இந்த சீரியலை நிறைய மக்கள் விரும்பி பார்க்க ஆரம்பித்தனர்.

கணவனிடம் கோபப்படுவது,கொழுந்தனாரிடம் வ ம்பிழுப்பது,நாத்தனார்களை பாடாய்படுத்துவது,வீட்டிலுள்ளவர்களை எடுத்தெறிந்து பேசுவது இதுதான் மீனாவின் முழு நேர வேலை.ஆனால் அவள் என்றும் தன் அப்பா,அம்மாவிடம் புகுந்த வீட்டை விட்டுக்கொடுத்ததில்லை.

மீனாவின் இந்த குணம் அனைத்துமே ஏதோ ஒரு வகையில்,நம் குடும்பத்திலுள்ள பெண்களை நினைவுப்படுத்துகிறது.என்னதான் வசதியான குடும்பத்து பெண்ணாக இருந்தாலும்,புகுந்த வீட்டில் இருப்பதை வைத்து அட்ஜஸ் செய்து வாழ்ந்து வருவது வேற லெவல் என்றே கூறலாம்.

தற்போதும் குறித்த சீரியலில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் இவர்.சமீபத்தில் சீரியலில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியது.ஆம் க ர்ப்பமாக இருந்த இவர் சீரியலிலும் க ர்ப்பமாக இருப்பது போன்று நடிக்கப்பட்டு,பின்பு மூன்று மாதத்திற்குள் மீண்டும் நடிப்பதற்கு ஆரம்பித்துவிட்டார்.

இம்முறை ஹேமாவுடன் சேர்ந்து அவரின் குழந்தையும் நடித்துக் கொண்டிருக்கிறது.ஹேமாவின் குழந்தையும் சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக கயல் என்ற ரோலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கிறது.தனக்கு கிடைத்த சீரியல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றதுடன்,தனது குழந்தையையும் இதில் நடிக்க வைத்த இவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.