நடிகர் ரகுமானுக்கு இவ்வளவு பெரிய மகள்களா..? ஹுரோயின் போல ஜொலிக்கும் அழகிய புகைப்படம் வைரல்

0

90 களின் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்கள் அறிமுகமாகி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றனர்மே.லும் அந்த காலத்தில் பல பிறமொழி நடிகர்கள் தமிழ்சினிமாவில் வலம் வந்ததோடு தனக்கென தனி அடையாளத்தையும் ஏற்படுத்தி கொண்டனர்.அந்த வகையில் அந்த காலத்தில் வெற்றி படங்களில் ஒன்றாக இருந்த சங்கமம் படத்தில் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் வெகு பிரபலமானவர் தான் ரஹ்மான்.அந்த படத்தில் இவரது நடிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இவர் மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக அந்த காலத்தில் கொடிகட்டி பறந்தவர்.இவர் தனது பதினாறு வயதிலேயே மலையாள படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி பல விருதுகளையும் வாங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நடிகரான ரகுமான் நிலவே மலரே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன்பின் தமிழில் பல படங்கள் நடித்துள்ளார்.அதிலும் அவர் நடித்த புது புது அர்த்தங்கள் திரைப்படம் ரகுமானுக்கு பெரிய வரவேற்ப்பை தந்தது.

இவரின்,எஸ்பிபி பாடிய கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என்ற பாடல் சூப்பர் ஹிட் பாடலாக அமைந்தது.1999 ல் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான் நடித்த சங்கமம் படம் சூப்பர் ஹிட் படமாக இருந்தது.

பில்லா,சிங்கம் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.2016 இல் இவர் நடித்த துருவங்கள் பதினாறு படத்திற்காக எம்ஜிஆர், சிவாஜி அகடமி அவார்ட்,மெட்ராஸ் டெலிவிஷன் அவார்ட் பெற்றுள்ளார்.

மேலும்,ரகுமான்,இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி சாய்ராபானுவின் தங்கை மெக்கருநிஷாவை 1993 ல் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு ரிஷிதா,அலிஷா என இரு மகள்கள் உள்ளனர்.

ரகுமானின் அம்மா சாவித்திரி சமீபத்தில் தவறினார்.ரகுமான்,கே பாலச்சந்தர் இயக்கத்தில் காதல் பகடை என்ற சன்டிவி தொடரிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் ரகுமானின் அழகிய மகள்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.