சுடிதாரில் சினேகா..! அட இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பார் போலிருக்கே..! வா யடைத்து போன ரசிகர்கள்

4

தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் வந்துவிட்ட போதிலும் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு தங்களுக்கென இன்றைக்கும் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள் எனலாம்.அந்த வகையில் மாடர்னாக நடித்தால் தான் இளைஞர்களின் மத்தியில் பிரபலமாக முடியும் என்பதை மாற்றி தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமின்றி தனது சிரிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் பலரது கனவு கன்னியாக இன்றைக்கும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை புன்னகை அரசி என அனைவராலும் செல்லமாக அழைக்கபடும் சினேகா.

அறிமுகமான ஒரு சில படங்களிலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் பலரது மனதை கவர்ந்ததோடு திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன்

பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். சமூக வலைதளத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து வரும் சினேகா தற்போது சுடிதார் அணிந்த புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

சினேகா தமிழ்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்தவர்.அவர் 2000 ஆண்டு மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

தமிழில் பல பிரபல முன்னணி நாயகர்களுடன் ஜோடியாக நடித்ததன் மூலம் டாப் டென்னிற்கு வந்த சினேகா புன்னகை அரசி என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

திருமணத்திற்கு பிறகு தனது குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் வாழ்த்துக்களை சினேகா பெற்றுவருகிறார்.அந்த வகையில் சுடிதாரில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.