நடிகையான சூப்பர் சிங்கர் பிரியங்கா…! எந்த படத்தில் தெரியுமா..? காட்டுத் தீ யாய் பரவும் தகவல்

2

சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள்,நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது.அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு வகையில் ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும்,விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு நிகராக வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.அந்த வகையில் விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.சூப்பர் சிங்கர் ஜூனியர் மூலம் பிரபலமடைந்த பூவையர்,தற்போது தமிழ் சினிமாவில் ஜூனியர் பாடகராக மட்டுமல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகின்றனர்.இந்த நிலையில் சூப்பர் சிங்கர் வருகின்றனர். பங்குபெற்ற பாடகி ஒருவர் தற்போது பல் மருத்துவராக

அவதாரமெடுத்துள்ளார்.அது வேறு யாரும் இல்ல பிரியங்கா தான்.சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 2-ல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் பிரிங்கா.பிசாசு 2 படத்தின் புரோமோஷன் வீடியோவில்

சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாக்கிய ‘பிசாசு 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் முதல் முறையாக ஆண்ட்ரியா சொந்த குரலில் டப்பிங் பேசி உள்ளார்.இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ‘பிசாசு 2’ படத்தின் புரோமோஷன் வீடியோ ஒன்று தயாராகி உள்ளது.இந்த வீடியோவில் சூப்பர் சிங்கர் பிரியங்கா நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

‘நெஞ்சே கேளு’ என்ற டைட்டில் உருவாகி வரும் புரமோஷன் பாடலில் தான் பிரியங்கா நடித்திருக்கின்றார்.மேலும் இந்த பாடலின் வீடியோ விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.