அதிதியிடம் காதலை கூறிய பிரபல நடிகர்..! தங்கச்சி என மன்னிப்பு கேட்ட சோ கம்

2

விருமன் படத்தை பார்த்து முடித்துவிட்டு அதிதிக்கு தனது காதலைக் கூறி பரபரப்பை ஏற்படுத்திய கூல் சுரேஷ் தற்போது ஷங்கர் மற்றும் அவரது மகள் அதிதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ஷங்கரின் இரண்டாவது மகள் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி உள்ள விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகியுள்ளார்.கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 12ம் தேதி திரையரங்குகளில் கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடித்த விருமன் திரைப்படம் வெளியானது.அந்த படத்தை டிஎஸ் தியேட்டரில் பார்த்த கூல் சுரேஷ் அதிதியை பார்த்து சில்லறையை சிதற விட்டேன் என்றும்,

அதிதி ஷங்கர் தான் என்னுடைய காதலி என்றும் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் காமெடியாக டிரெண்டானது.அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அதிதி ஷங்கரை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும்

படங்களில் காதலை சேர்த்து வைப்பது போல என்னுடைய காதலையும் சேர்த்து வைக்க வேண்டும் ஷங்கர் சார் என எழுதிய லவ் லெட்டரையும் மீடியாவுக்கு

முன்பாக கூல் சுரேஷ் காட்டியது சர்ச்சையை கிளப்பியது.இந்நிலையில்,கூல் சுரேஷ் திடீரென மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.அதில்,

தனது பள்ளி தோழி தேன்மொழி ஞாபகம் அதிதி தேனாக நடித்ததை பார்த்து வந்து விட்டது என்றும் அப்படி பேசியது தவறு தான் என்னை மன்னித்து விட்டு விடுங்கள் என்று கூறி உள்ளார்.நடிகை அதிதி ஷங்கர் எனக்கு தங்கச்சி மாதிரி என்று ஒரே போடாக கூல்

சுரேஷ் அல்லு நடுங்க பேசியிருப்பது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.விருமன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து வியந்து போய் அப்படி ஓவராக பேசி விட்டேன் என்றும் கூல் சுரேஷ் கூறியுள்ளார்.