சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் செய்த செயல்..! ரசிகர்களை நெகிழ வைத்த சம்பவம் : நடந்தது என்ன தெரியுமா…..?

2

சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அணைத்து நிகழ்ச்சிகளும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலத்தை பெற்று வருகிறது எனலாம்.அதே வேளையில் இந்த சேனலில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அல்லது நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாவதை தொடர்ந்து சின்னத்திரையை தாண்டி வெள்ளித்திரையிலும் பல படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் இந்த சேனலில் வெளியான நகைச்சுவை போட்டியை மையமாக வைத்து வெளியான ரியாலிட்டி நிகழ்ச்சியான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக

லந்து தனது நகைச்சுவை திறமையால் அந்த சீசனின் டைட்டிலையும் தட்டி சென்று அதன் மூலம் பிரபலமாகி அதே சேனலில் தொகுப்பாளராக தன்னை மக்கள் மத்தியில் அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்காக தனுஷ் கதை கேட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.அதாவது திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன்,

திடீரென தனுஷ் ஒரு நாள் என்னிடம் உங்களது அசிஸ்டன்ட் யாராவது காமெடி கதை வைத்திருந்தால் கேளுங்கள் என்று கேட்டார்.அதற்கு உங்களுக்கு காமெடி கதைகள் பிடிக்குமா என்று நான் கேட்டேன்.ஆனால் அவர்,

அந்தக் கதை சிவகார்த்திகேயனுக்கு தேவை என்று கூறினார்.சிவகார்த்திகேயன் திறமையான நடிகர் என்றும் அவரிடம் சூப்பர் ஸ்டார் ஆகும் அளவிற்கு எல்லா தகுதிகளும் திறமைகளும் இருப்பதாகவும் தனுஷ் என்னிடம் கூறினார் என்று வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.

தனுஷின் இந்த செயலுக்கு அவரது ரசிகர்கள் மற்றும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.அது மட்டுமல்லாமல் மீண்டும் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் கூட்டணி வைக்க வேண்டும் எனவும் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.