கோலங்கள் புகழ் சீரியல் நடிகை ஸ்ரீவித்யா என்ன தொழில் செய்கிறார் தெரியுமா..?

0

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்,என்னவளே படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் காகடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீவித்யா.சின்னத்திரையிலும் கோலங்கள்,தென்றலில் நடித்து ஸ்கோர் செய்தவர்.வெள்ளித்திரையை விட,இவரின் சின்னத்திரை நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.அதேபோல் சூர்யா,ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்திலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருப்பார்.இதுபோக சிவசக்தி,முந்தானை முடிச்சு சீரியல்களிலும் நடித்திருந்தார்.கோலங்களில் இவரது ஆர்த்தி கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது.தன் இடைவிடாத நடிப்புக்கு இடையே, எம்.பி.ஏ படித்து முடித்த ஸ்ரீவித்யா,தன் உறவினர் ஒருவரையே திருமணமும் செய்தார்.

90 ஸ் காலக்கட்டத்தில் முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஸ்ரீவித்யா உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னவளே படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் வந்தவர்.

இவர்,சீரியலில் கோலங்கள்,தென்றலில் நடித்து புகழ்பெற்றவர்.இவரின் நடிப்பு அப்போதெ மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. இதனையடுத்து,சீரியல்களில் பிஸியாக இருந்த போது தன்னுடைய உறவினரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்த நிலையில்,தற்போது என்ன செய்கிறார் எங்கு இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.அதன்படி வெளிநாடுகளில் ஃபேமஸாக இருக்கும் ‘கிளவுட் கிச்சன்’ எனும் கான்செப்டில்

சொந்தமாக தொழில் தொடங்கி, வெற்றிகரமாக நிர்வகித்து வருகிறார்.சென்னையில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு நல்ல சுவையான சாப்பாடு செய்து தருகிறது இவரது நிறுவனம்.

ஹோட்டல் போல இல்லாமல்,உணவு தேவைப்படுவோர் அழைப்பின் பேரில் வீட்டிலேயே செய்து தரும் முறை தானாம்.சினிமா அல்லது சீரியல்களில் நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பிலும் அசத்த ரெடியாக இருக்கிறாராம் அம்மணி.