விஜய்யின் கண்முன்னே இரண்டாம் திருமணம்..! அவரது தந்தை சொன்ன சீ க்ரெட் தகவல்

0

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் தற்போது வி றுவிறுப்பாக நடந்து வருகிறது.அப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67 வது திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் அப்படத்தின் அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.இந்நிலையில் நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தை இடையே கடந்த நாட்களாகவே பல ச ர்ச்சையான விஷயங்கள் நடந்து வருகிறது.அந்த வகையில் சமீபத்தில் கூட விஜய் SAC-யின் பிறந்தநாளில் கலந்து கொள்ளாததை பலரும் வி மர்சனம் செய்தனர்.இதற்கிடையே SAC சொந்தமாக யார் இந்த SAC என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

அதில் தனது வாழ்க்கை மற்றும் திரையுலக அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,ஷோபா முழு சமதத்துடன் தனக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாகவும்,அது விஜய்யின் கண்முன்னே நடந்தாகவும் பேசியிருக்கிறார்.

ஷோபா,சந்திரசேகர் இருவரும் ஹிந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள்.இவர்களின் திருமணம் இந்த முறைப்படியும் இல்லாமல் பொதுவாக தாலி கட்டியவுடன் முடிந்துள்ளது,பின்னர் இவர்களுக்கு விஜய் மகனாக பிறந்துள்ளார்.

ஒருநாள் ஷோபா SAC-யிடம் நாம் இருவரும் வெவ்வேறு படகில் பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.இதில் பெரிய அலையோ அல்லது சுழற்சியோ வந்தால் இருவரும் ஒரே இடத்தில் கரை ஒதுங்க முடியாது,வெவ்வேறு திசையில் தான் இருப்போம்.

நாம் ஒரே படகில் சேர்ந்து செல்ல வேண்டும் என்றால்,நாம் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ள வேண்டும்.அது கிறிஸ்துவ முறைப்படி இருக்க வேண்டும்,அப்போது தான் இருவரும் ஒரே படகில் பயணம் செய்வது போல் இருக்கும் என ஷோபா SAC-யிடம் தெரிவித்தாராம்.

இதனால் தான் ஷோபாவையே SAC இரண்டாவது முறை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டதாகவும்,அப்போது விஜய்க்கு 6 வயது என்றும் ஷோபா அப்போது கர்ப்பமாக இருந்ததாகவும் தெரிவித்து இருக்கிறார் SAC.