KGF பட புகழ் நடிகர் யஷ் சகோதரியை பார்த்திருக்கிறீர்களா…? முதன்முறையாக வெளிவந்த புகைப்படம்

0

தென்னிந்திய சினிமாவில் நடிகர் ஆவது என்பதே சிரமமான ஒன்றாக இருக்கும் நிலையில் அதுவும் அக்ஷன் மற்றும் மாஸ் ஹீரோவாவது என்பது மிகவும் இயலாத ஒன்று.பல படங்களில் கதாநாயகனாக நடித்தும் இன்றளவும் அந்த பெயருக்கு ஏங்கி வரும் பிரபல நடிகர்கள் பலர் இப்படி இருக்கையில் நடித்த முதல் படத்திலேயே உலக அளவில் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தவர் தான் பிரபல கன்னட நடிகர் யாஷ். கன்னட சினிமாவில் சின்னத்திரைகளில் கதாநாயகனாக நடித்து வந்த இவரது இயற்பெயர் நவீன்குமார் கவுடா.ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த யாஷ் தனது கல்லூரி படிப்பை முடித்து நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் பிரபல நாடக கலைஞர் பி.வி.காரந்த் உருவாக்கிய பெனகா நாடக குழுவில் சேர்ந்து சிறு கதாபாத்திரங்களில் நடிக்க துவங்கினார்.

இதன் பின் இவரது தோற்றம் மற்றும் நடிப்பின் காரணமாக அந்த நாடகங்களில் கதாநாயகனாக அறிமுகமானார்.இதன் மூலம் மக்களிடையே நன்மதிப்பை பெற்ற யாஷ் சின்னத்திரை தொடர்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.

ஒரே ஒரு படம் ஓஹோனு வாழ்க்கை என இப்போது வாழ்ந்து வருகிறார் கன்னட சினிமா நடிகர் யஷ். KGF என்ற ஒற்றை திரைப்படம் இவரது வாழ்க்கையையே மாற்றிவிட்டது.

கன்னட சினிமாவை தாண்டி இவர் என்றே தெரியாமல் இருந்த இந்திய சினிமா ரசிகர்களுக்கு இப்போது பிடித்தமான நடிகர்களின் லிஸ்டில் இவர் இடம்பிடித்துவிட்டார்.

அடுத்து இவர் KGF 3ம் பாகம் எப்போது நடிப்பார் என்ற கேள்வி தான் ரசிகர்களிடம் அதிகம் உள்ளது,KGF 2 திரைப்படம் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய சாதனை செய்துவிட்டது.

இந்தியாவில் இன்று சகோதர,சகோதரிகள் தினம் கொண்டாடப்படுகிறது.எனவே நடிகர் யஷ் சகோதரி அவருக்கு கையில் ராக்கி கட்டி சம்பிரதாயங்கள் செய்துள்ளார்.அந்த புகைப்படத்தையும் யஷ் அவர்களே தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.