மகன், மகளுடன் நீச்சல் குளத்தில் நடிகை சினேகா..!! வெளிவந்த புகைப்படத்தை பாருங்க..?

0

தமிழ் சினிமாவில் இன்று எத்தனையோ பல புதுமுக இளம் நடிகைகள் வந்துவிட்ட போதிலும் அந்த காலத்தில் படங்களில் நடித்த பல முன்னணி நடிகைகள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பதோடு தங்களுக்கென இன்றைக்கும் தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார்கள் எனலாம்.அந்த வகையில் மாடர்னாக நடித்தால் தான் இளைஞர்களின் மத்தியில் பிரபலமாக முடியும் என்பதை மாற்றி தொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்தது மட்டுமின்றி தனது சிரிப்பு மற்றும் வசீகரமான தோற்றத்தால் பலரது கனவு கன்னியாக இன்றைக்கும் இருந்து வருபவர் பிரபல முன்னணி நடிகை புன்னகை அரசி என அனைவராலும் செல்லமாக அழைக்கபடும் சினேகா.

அறிமுகமான ஒரு சில படங்களிலேயே தனது தேர்ந்த நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் பலரது மனதை கவர்ந்ததோடு திரையுலகில் பிரபலமானதை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சினேகா.இவர் நடிப்பில் வெளிவந்த ஆனந்தம்,உன்னை நினைந்து,புதுப்பேட்டை,வசூல் ராஜா,ஆட்டோகிராஃப் ஆகிய படங்கள் நம் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

நடிகை சினேகா கடந்த 2013ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினேகா – பிரசன்னாவிற்கு விஹான் எனும் ஒரு மகனும்,ஆதயந்தா எனும் ஒரு மகளும் உள்ளனர்.தனது குடும்பத்துடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சினேகா பதிவு செய்வார்.

அந்த வகையில் தற்போது தனது மகன், மகளுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
அதுமட்டுமின்றி தனது மகன் விஹானுக்கு பிறந்தநாள் வாழ்த்தையும் அதில் கூறியுள்ளார் சினேகா.இதோ அந்த புகைப்படம்