சூப்பர் சிங்கர் நடுவரும் பின்னணி பாடகருமான மனோவின் மனைவியை பார்த்துள்ளீர்கள்..!! புகைப்படம் இதோ

1

பொதுவாகவே மக்கள் மத்தியில் சினிமாவில் வரும் கதைகள் எந்த அளவிற்கு முக்கியமோ அதே போல் அந்த படங்களில் வரும் பாடல்களும் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.மேலும் சொல்லப்போனால் பல படங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருவது பாடல்கள் தான் எனலாம்.அந்த வகையில் இந்த பாடல்களை அந்த காலத்தில் பலரும் படத்தில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்கள் தான் பாடி நடிக்கிறார்கள் என நினைத்து வந்தோம்,ஆனால் சிறிது காலம் கழித்தே பாடல்களை வேறு நபர்கள் பாடுகிறார்கள் என தெரிய வந்தது அதன் பின்னரே அந்த பாடல்களை பாடும் பாடகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக ஆரம்பித்தார்கள் எனலாம்.இந்நிலையில் தனது திரை வாழ்க்கையை நடிகராக ஆரம்பித்து அதன் பின்னர் பாடகராக தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல பின்னணி பாடகர் மனோ.

இசைஞானி இளையராஜாவின் இசையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் பல வெற்றி பாடல்களை பாடியுள்ளார். மேலும் இவர் பாடகர் ஆவதற்கு முன்னரே தமிழ்,தெலுங்கு,மலையாளம் என பல மொழிப்படங்களில் படங்களில்

தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் பிஸியான பின்னணி பாடகராக இருந்தவர் மனோ.இவர் ரஜினிகாந்த்,கமல் ஹாசன்,சிரஞ்சீவி என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு பாடியுள்ளார்.

இவர் குரலில் வெளிவந்த முக்காலா முக்காபுல்லா,ஆத்தங்கர மரமே,நட்சத்திர ஜன்னலில் மற்றும் தில்லானா தில்லானா ஆகிய பாடல்கள் அனைவருடைய மனதை கவர்ந்த ஒன்று.

பின்னணி பாடகராக மட்டுமல்லாமல்,விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக சூப்பர் சிங்கரில் நடுவராகவும் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.பாடகர் மனோ கடந்த 1985ஆம் ஆண்டு ஜமீலா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.இந்நிலையில்,தனது மனைவியுடன் திருமண நாளில் மனோ எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம்