ஷங்கர் மகள் அதிதிக்கு பிடித்த தமிழ் ஹீரோ யார் தெரியுமா..?

2

தமிழ் சினிமாவில் நடிகர் நடிகைகளை விட தமிழ் திரைப்பட இயக்குனர்கலையும் மக்கள் பாராட்டி கொண்டு வருகின்றனர் அதில் இவரும் ஒருவர்.ஜென்டில்மேன் (1993) திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமானார்,அதற்காக அவர் பிலிம்பேர் சிறந்த இயக்குனர் விருது மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றார்.அவர் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் திரைப்பட இயக்குநர்களில் ஒருவர்,குறிப்பாக விஷுவல் எஃபெக்ட்ஸ்,புரோஸ்டெடிக் மேக்கப் மற்றும் பாடல்களில் அதிநவீன தொழில்நுட்பத்தின் விரிவான பயன்பாட்டிற்கு பெயர் பெற்றவர்.

இவர்1986 இல் வசந்த ராகம் மற்றும் சீதா ஆகிய படங்களில் நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் பல ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரி என்ற தமிழ் பெண்ணை திருமணம் செய்தர். இவருக்கு 2 மகள்களும் மற்றும் 1 மகனும் உன்ளனர்.

பிரம்மாண்ட படங்களுக்கு பெயர்போன இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதிக்கு தற்போது வாய்ப்புகள் குவிந்து வருகிறது.கார்த்தியின் விருமன் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆகி இருக்கிறார் ஷங்கர் மகள் அதிதி.

அவர் அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.மா வீரன் என்ற அந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தான் பூஜையுடன் தொடங்கியது.

மேலும் அதிதிக்கு தெலுங்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.தற்போது அதிதி ஷங்கர் அளித்து இருக்கும் பேட்டியில் தான் சூர்யா சாரின் தீ விர ரசிகை என தெரிவித்து இருக்கிறார்.

அதனால் தான் விருமன் இசை வெளியீட்டு விழாவில் எல்லோரும் ரோலக்ஸ் ரோலக்ஸ் என க த்தி கொண்டிருக்கும்போது நானும் சேர்ந்து க த்தினேன் என கூறி இருக்கிறார்.சூர்யாவின் மிக தீ விர ரசிகையான அதிதிக்க அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா..? பொறுத்திருந்து பார்க்கலாம்.