புதிய தொழிலை ஆரம்பித்த நடிகர் சூர்யா : என்ன தொழில் தெரியுமா..? உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்

7

தென்னிந்திய சினிமாவில் தற்போது பல முன்னணி சினிமா பிரபலங்களின் வாரிசுகள் படங்களில் ஹீரோ ஹீரோயின்களாக நடித்து வருகிறார்கள் இருப்பினும் இதில் ஒரு சிலர் மட்டுமே தங்களது நடிப்பு திறமையை வெளிக்காட்டி அதன் மூலம் பிரபலமடைந்து தொடர்ந்து படங்களில் நடித்து வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளனர்.அந்த வகையில் பிரபல முன்னணி நடிகரான சிவகுமாரின் இரு மகன்களும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பரந்து வருகின்றனர்.அதிலும் மூத்த மகனான சூர்யா அவர்கள் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருவதோடு தனக்கென மக்கள் மற்றும் திரையுலகில் தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் வைத்துள்ளார்.

மேலும் சமீபத்தில் கூட மாறுபட்ட கதாபாத்திரத்தில் விக்ரம் படத்தில் ரொலெக்ஸ் எனும் வில்லன் வே டத்தில் நடித்து பலத்த பாராட்டுகளை பெற்று இருந்தார்.

நடிகர் சூர்யா புதிய பிசினசில் அடுத்த படிக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தியேட்டர்கள் பலவற்றை குத்தகைக்கு எடுத்து,நடத்த சூர்யா முயற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.

மாவட்டம்தோறும் சில தியேட்டர்களை குத்தகை எடுத்து நடத்த சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும்,ரசிகர்களின் விருப்பங்களை தெரிந்து கொள்வதற்காக தான் சூர்யா இந்த ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதோடு விநியோகஸ்தர்களின் சிரமங்களை அறிந்து கொள்வதற்காகவும் அவர் இதை செய்யவுள்ளாராம்.இதேவேளை,ரசிகர்களின் விருப்பங்களை அறிந்து செயல்படவும்,விநியோகஸ்தர்களின் சிரமங்களை

தெரிந்து கொள்ளவும் தான் முயற்சி மேற்கொள்ள உள்ளதாக சமீபத்தில் சூர்யா தெரிவித்திருந்தார்.தான் சொன்னதை நிறைவேற்றுவதற்காக தான் சூர்யா இந்த வகையில் பிசினசை டெவலப் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.