துளியும் மே க்கப் இல்லாமல் 55 வயதிலும் இம்புட்டு அழகா..? நடிகை நதியா வெளியிட்ட புகைப்படம்

4

துளியும் மே க்கப் இல்லாமல் நடிகை நதியா வெளியிட்டுள்ள புகைப்படத்தினை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.1980ல் இளைஞர்களின் மனதில் கொடி கட்டி பறந்த நதியா தற்போதும் இளமையாகவே காணப்படுகின்றார்.தமிழ்,மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளில் வலம் வந்த இவருக்கு 1984ம் ஆண்டும் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.அதன் பின்பு தமிழில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த இவர் பின்பு பல படங்களில் நடித்து ரசிகர்களை க வர்ந்தார்.

அன்புள்ள அப்பா படத்திற்கான சிறந்த நடிகையாக விருது பெற்ற இவர்,1988ம் ஆண்டு ஷிரிஷ் காட்போல் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாடுகளில் தனது வாழ்க்கையை பயணித்தார்.

பின்பு 2007ம் ஆண்டு மீண்டும் இந்தியா திரும்பி வந்த நதியா,தாமிரபரணி,ச ண்டை,பட்டாளம் உள்ளிட்ட படங்களில்
காட்சியளித்திருந்தார்.தமிழ்,தெலுங்கு,

மலையாள படங்களில் ஒப்பந்தமாக தொடங்கிய இவர் சமீபத்தில் வெளியான ராம் போத்தினேனியின் தீ வாரியர் படத்தில் நாயகனுக்கு அம்மாவாக நடித்திருந்தார் நதியா.

இதற்கிடையே அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடும் பழக்கத்தை கொண்ட இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த புகைப்படத்தில் து ளியும் மே க்கப் இல்லாமல் அவர் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.புகைப்படத்துடன் சன்செட்டை தனது நண்பரின் பால்கனியில் இருந்து ரசிப்பதாக குறிப்பிட்டுள்ளார் நதியா.