நடிகர் கவுண்டமணியின் பூர்வீக கிராமத்தில் இருக்கும் சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா..?

1

தமிழ் சினிமாவில் சீசனுக்கு சீசன் எதாவது ஒரு காமெடி நடிகர் எப்பொழுதும் டிரண்டிங்கில் இருந்து கொண்டே இருப்பார்கள்.மற்ற நடிகர் நடிகைகள் கதாபாத்திரங்களுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த காமெடி கதாபாத்திரங்களுக்கு மட்டும் எப்பொழுதும் பஞ்சமே இருந்தது இல்லை என்றே சொல்ல வேண்டும்.காலகட்டத்திற்கு தகுந்தார் போல புது புது காமெடி நடிகர்கள் அவ்வபோது தமிழ் திரையுல்லகில் உதயமாகி முன்னணி நடிகர்கள் மற்றும் உச்ச நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிப்பார்கள் என்றே சொலல் வேண்டும்.இப்படி அவர்களில் ஒருவராக தனக்கே உரித்தான பாணியில் கலாய்த்து காமெடி

செய்து மிகப்பெரும் காமெடி நடிகராக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர் காமெடி நாயகன் கவுண்டமணி.இப்படி ஆரம்பத்தில் தனி ஒரு ஆளாக கலாய்த்து காமெடி செய்து வந்த நடிகர் கவுண்டமணி பின்னர் போக போக

நடிகர் செந்திலுடன் இணைந்து பல வெற்றிப்படங்களில் நடித்து இருந்தார்.கிட்டத்தட்ட கவுண்டமணி செந்தில் இருந்தால் மட்டுமே நாங்கள் படம் எடுப்போம் என தயாரிப்பாளர்கள் கூறும் அளவுக்கு அப்போது இருவரும் உச்சத்தில் இருந்தனர்.

பெயரை கேட்டாலே சும்மா அதிருதுல என சொல்லும் அளவிற்கு ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த காமெடி நடிகர்.சமூக சிந்தனையோடும்,கலகலப்பாகவும் அதே சமயம் கொஞ்சம் நக்கல் கலந்த காமெடிகளை வீசி இப்போது மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் கவுண்டமணி.

83 வயதாகும் இவர் இப்போது நடிப்பது இல்லை,அவ்வப்போது சில பிரபலங்களின் திருமண நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொள்கிறார்.கவுண்டமணி அவர்களுக்கு பொள்ளாச்சி பக்கத்தில் பல்லகுண்டாபுரம் என்ற இடம் தான் பூர்வீகம்.

அங்கு அவர் பிறந்து வளர்ந்த சொந்த வீடு ஒன்று உள்ளது,அதில் அவரது அக்கா வசித்து வருவதாக கூறப்படுகிறது.தற்போது கவுண்டமணி சொந்த வீட்டின் புகைபபடம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.இதோ