அண்ணாச்சியுடன் தி லெஜண்ட் திரைப்படத்தில் நடிக்க நடிகை ஊர்வசிக்கு தரப்பட்ட சம்பளம்…! இத்தனை கோடியா

0

வெள்ளித்திரை சினிமாவைப் பொறுத்தவரை அதில் வரும் நடிகர் நடிகைகள் ஓரளவிற்க்கு பிரபலமானதும் விளம்பர படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி பல கோடிகளை சம்பாதித்து வருகின்றனர்.இந்த வகையில் இவர்களுக்கு எல்லாம் டப் கொடுக்கும் அளவில் தனது கடை விளம்பரத்தில் தானே நடித்து உலகளவில் பிரபலமானவர் தான் நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அருள்.இவரை தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு தனது கடை விளம்பரத்தில் முன்னனி கதாநாயகிகளை வைத்து நடித்து மக்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே இணையத்தில் பல விமர்சனங்களுக்கு ஆளானதோடு பிரபலமானவர்.

51-வயதான சரவனணன் அருள் சரவணா ஸ்டோர்ஸ்ஸின் நிறுவனரான சரவணா செல்வரத்தினத்தின் மகனாவார்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் இல்லாத இடமே இல்லை எனலாம் .

தமிழகத்தில் மிகவும் பிரபலமான சரவணா ஸ்டோர்ஸ் கடையின் உரிமையாளர் அருள் சரவணன்.இவர் தற்போது தி லெஜண்ட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

ஜெ டி ஜெர்ரி இயக்கத்தில் நடிகை ஊர்வசி ராவ்டேலா கதாநாயகியாக நடித்துள்ள இப்படம் நேற்று வெளியானது முதல் அனைவரிடமும் சோசமான விமர்சனங்களையே பெற்று வருகிறது.

மேலும் தற்போது அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் ஊர்வசி ராவ்டேலா.Miss Diva Universe 2015 பட்டம் பெற்றுள்ள இவர் ஒரு சில பாலிவுட் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் தி லெஜண்ட் திரைப்படத்தில் அண்ணாச்சிக்கு கதாநாயகியாக நடித்துள்ள ஊர்வசிக்கு தரப்பட்ட சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.ஆம்,இப்படத்திற்காக அவருக்கு ரூ. 20 கோடி சம்பளமாக அளிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.