விஜயகுமாருக்கு இவ்ளோ பெரிய பேத்தியா..? வெளிநாட்டில் குடும்பத்துடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்கும் மகள்

0

தமிழ் சினிமாவில் 70களில் முன்னணி பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகுமார்.அவர்கள் இவர் கோலிவுட் துறையில் தனது முதல் படமான பொண்ணுக்கு தங்க மனசு மூலமாக அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர்.இவர் பிறகு அந்த படம் மூலம் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.மேலும் நடிகர் விஜயகுமார் அவர்கள் வெள்ளித்திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்து மக்களை கவர்ந்துள்ளார்.இவர் தங்கம்,வம்சம்,நந்தினி என பல சீரியல் தொடர்களில் நடித்து அந்த தொடர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

விஜயகுமார் அவர்கள் 1976ஆம் ஆண்டு பிரபல நடிகையான மஞ்சுளா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் இருந்து வருகிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்.தற்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழும் விஜயகுமாரின் மகளான ஸ்ரீதேவி சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.பின் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார்.பிறகு இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தினை கவனித்து வருகின்றார்.

இவருக்கு ரூபிகா என்ற மகளும் இருக்கிறார். தற்போது ரூபிகா தன்னுடைய 6 வது பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் கொண்டாடியுள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.