நான் கடவுள் மொட்ட ராஜேந்திரனுக்கு இப்படி ஒரு நிலைமையா…? சோகத்தின் உச்சம்

2

தென்னிந்திய சினிமாவை பொறுத்த போதிலும் திரைப்படங்களில் நடிக்கும் கதாநாயகர்களுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கிறதோ அவர்களை காட்டிலும் அதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு இருக்கும்.அந்த வகையில் அந்த காலத்தில் பல நடிகர்கள் வில்லத்தனத்தில் படங்களில் கலக்கியதோடு பல மக்களின் மனதிலும் தங்களது சிறந்த நடிப்பால் அவர்களை மிரட்டியுள்ளனர் அவர்களை பார்த்தாலே மக்கள் மிரண்டு போகும் அளவிற்கு நடித்து பலத்த வரவேற்பை பெற்றுள்ளனர்.இருப்பினும் இவ்வாறு பல முன்னணி படங்களில் வில்லனாக நடித்து பிரபலமாக இருக்கும் பல நடிகர்கள் தற்போழுது திரைப்படங்களில் தங்களது வில்லத்தனத்தை முழுவதும் தவிர்த்து காமெடி மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரபல வில்லன் நடிகர்களான ஆனந்தராஜ்,மன்சூர் அலிகான்,பொன்னம் பலம் போன்ற பல நடிகர்கள் தற்போது சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்த வண்ணம் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் ஸ்டன்ட் கலைஞராக அறிமுகமாகி 100 படங்களுக்கு மேல் அதே பணியை செய்து பின் நான் கடவுள் படத்தின் மூலம் வில்லனாக களமிறங்கியவர் மொட்ட ராஜேந்திரன்.

மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு வேலாயுதம்,சிங்கம் 2,ராஜா ராணி,தெறி,ரெமோ என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.இடையில் காமெடியனாக கூட சில படங்களில் கலக்கினார்.

தமிழை தாண்டி மலையாளம்,கன்னடம்,ஹிந்தி,தெலுங்கு மொழிகளிலும் படங்கள் நடித்து வந்துள்ளார்.தரமான வேடங்களாக தேர்வு செய்து நடிக்காமல் கிடைக்கும்

படங்களில் எல்லாம் நடித்து வந்த ராஜேந்திரனுக்கு இப்போது பட வாய்ப்புகளே வருவது இல்லை.நல்ல திறமை இருந்தும் அவருக்கு பட வாயப்புகள் வராதது கொஞ்சம் சோகத்தையே கொடுக்கிறது.